2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சமந்தாவின் சாதனை

J.A. George   / 2021 ஜனவரி 26 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி இணையத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் வரவேற்பை பெற்றது.

முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸனை அமேசான் ப்ரைம் தயாரித்துள்ளது. இந்த சீஸனில் சமந்தாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தநிலையில் இந்த ‘தி ஃபேமிலி மேன்’ இரண்டாவது சீசனுக்காக டவிட்டர் தளம் பிரத்யேக எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த எமோஜியில் மனோஜ் பாஜ்பாய் மற்றும் சமந்தாவின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

ரசிகர்களால் அதிக எதிர்பார்க்கப்படும் திரைப்படமோ அல்லது வெப் தொடர்களோ வெளியாகும்போது ட்விட்டர் தளத்தில் இப்படி எமோஜி வெளியாவது வழக்கம்.

எனினும், ட்விட்டர் எமோஜியில் ஒரு தென்னிந்திய நடிகையின் படம் இடம்பெறுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X