2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சர்ச்சையில் அஜித் ஹீரோயின்

J.A. George   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜினியின் காலா திரைப்படத்தில் நடித்த ஹூமா குரேஷி, வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கையில் மது கோப்பையை வைத்திருக்கிறார். அருகில் மது போத்தல் உள்ளது. 

"மும்பையில் குளிர்காலத்தில் மதிய நேரம் கோடை காலம் போல் இருக்கும் போது இப்படி ஒரு மது தேவைப்படுகிறது", என ஹூமா குரேஷி அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மதுவை எப்படி கலவை செய்து அருந்த வேண்டும் என்பதையும் ஹூமா விளக்கியுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஹூமாவை வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். "இப்படி மது அருந்துவது தவறாக தெரியவில்லையா?", என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X