2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சல்மான் கானின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Editorial   / 2021 மே 31 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த பொலிவூட் திரைப்படம் ராதே.

இத் திரைப்படம் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக ஓ.டி.டி. தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டது.

எனினும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அத்துடன் ரசிகர்கள் பலரும் சட்டவிரோதமான முறையில்  இணையத்தின் மூலம் அப்படத்தை பார்வையிட்டுள்ளனர். 

இதனால்  கோபமடைந்த  சல்மான் குறித்த திரைப்படத்தை  கிண்டலடித்து விமர்சனம் செய்தவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். சல்மானின் இந்த நடவடிக்கை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ராதே படத்தை ஓடிடி-யில் வெளியிட்டதால், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவதையடுத்து, சல்மான் கான் ”தன்னுடைய படங்களை ஓடிடியில் வெளியிடப் போவதில்லை, திரையரங்குகளில்  மட்டுமே வெளியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X