Editorial / 2020 ஜூன் 22 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால், தனது டிக்டாக் கணக்கில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய – சீன எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியா முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சில நடிகர், நடிகைகள் சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலியில் இருந்து விலக தீர்மானித்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டிக் டாக் மற்றும் சீன செயலிகளின் கணக்குகளை அழித்து விட்டதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரபல நடிகை சாக்ஷி அகர்வாலும் டிக்டாக் செயலியில் இருந்து விலகியுள்ளார். டிக்டாக்கில் அவரை 2.18 இலட்சம் பேர் பின் தொடர்ந்தனர்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்தியா. சீனா அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நிலத்தை அபகரிக்க பார்க்கிறது.
எனவே நான் இனி சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும் சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.
இதன் ஆரம்பமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன். நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக இதை செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .