Freelancer / 2024 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் நிரபராதி என திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி ரேவதி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார்.
இதற்காக, சித்ராவின் கணவர் ஹேம்நாத் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என கூறி அவரை விடுதலை செய்து நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார்.S
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025