2025 மே 02, வெள்ளிக்கிழமை

சூர்யாவின் இன்ப அதிர்ச்சி

J.A. George   / 2023 நவம்பர் 14 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. இந்த படத்தில் ஹிந்தி நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை அண்மையில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி கங்குவா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் சூர்யா கையில் நெருப்புடன் நிற்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .