2025 மே 17, சனிக்கிழமை

டொம் குரூஸ் திரைப்படக்குழுவின் விமானம் விழுந்து நொறுங்கியது

George   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொலிவூட் நடிகர் டொம் குரூஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படபிடிப்பு குழுவினர் சென்ற  சிறியரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள.

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான டொம் குரூஸ், தற்போது மேனா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கொலம்பியாவின் மெடலின் பகுதியில் போதை மருந்து கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபரை அழிக்கும் வேட்டையில் ஈடுபட்ட பேரி சீல் என்ற அமெரிக்க விமானியின் வாழ்க்கையை மையமாக வைத்து திரில்லர் திரைப்படமாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.

தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு குழுவினர், நேற்று என்ரிக் ஓலாயா ஹெரிரா விமான நிலையத்துக்குச் சிறியரக விமானத்தில் புறப்பட்டனர். சென் பெட்ரோ நகரின் மலைப்பகுதியில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது.

இதில் விமானி எலன் பர்வின், கொலம்பியாவின் கார்லஸ் பெர்ல் ஆகியோர் பலியாகினர். மற்றொரு விமானியான ஜிம்மி லி காரிண்ட் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாயகனான டொம் குரூஸ், கடந்த மாதம் 20ஆம் திகதி கொலம்பியாவுக்கு வந்து தனது காட்சிகளை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .