2026 மே 02, சனிக்கிழமை

டாக்ஷிஸ் திரைப்படத்தின் ரிலீஸ் திகதியில் மாற்றம்

Lenin Raj   / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும்  தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ்  நடித்துள்ளார்.

கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் கதையாக 'டாக்ஸிக்' படம் உருவாகியுள்ளது.

இப்படம் கடந்த மார்ச் 19ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் என கூறி வருகிற ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில், ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் 'டாக்ஸிக்' படம் வெளியாகும் என அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது 'டாக்ஸிக்' படத்தின் ரிலீஸ் திகதியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 'டாக்ஸிக்' படம் தயாராகிவிட்டது, தற்போது நாங்கள் உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை ஒருங்கிணைத்து வருகிறோம். இதன் காரணமாக, எங்கள் வெளியீட்டு கால அட்டவணையை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளோம்.

முன்னதாக அறிவித்தபடி ஜூன் 4 அன்று படம் வெளியாகாது என்றாலும், பின்னர் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு திகதியில் வெளியிடப்படும். 'டாக்ஸிக்' விரைவில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .