Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு
இருக்கின்றன. இந்நிலையில், நடிகை திரிஷா டிக் டாக் பக்கம் களமிறங்கி தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
96 படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் நல்ல ஒரு கம்பேக்
கிடைத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில்
பிசி நாயகியாக வலம் வந்த நடிகை திரிஷா, திடீரென பரவிய கொவிட்-19 காரணமாக நாடு முழுவதும் லொக் டவுண் ஏற்பட்டு இருப்பதால், கெமரா முன்னாடி
நிற்க முடியாமல் இருக்கும் தருணத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் படங்களில் நடிக்க வேண்டிய நடிகை திரிஷா இந்த நேரத்தில்
வெளியே போக முடியாததால், டிக் டாக் அக்கவுண்ட்டில் கணக்கை துவங்கி தனது ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக டான்ஸ் ஆடும் வீடியோக்களை போட்டு
வைரலாக்கி வருகிறார். தனது இன்ஸ்டா ஸ்டோரிஸிலும் டிக் டாக் வீடியோக்களை செயார் செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .