2025 மே 07, புதன்கிழமை

டிஜிட்டலில் வெளியாகும் மன்மதன்

J.A. George   / 2021 மார்ச் 16 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

2004ஆம் ஆண்டு ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மன்மதன்'. ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்திருந்தார்கள்.

யுவன் இசையமைப்பில் வெளியான இந்தத்திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. முதன்முறையாக சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தத் திரைப்படம் மார்ச் 19ம் திகதி மீண்டும் வெளியாகவுள்ளது.

முழுக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் 150 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மீண்டும் 'மன்மதன்' வெளியாகவுள்ளதால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X