Editorial / 2024 ஜூலை 03 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான திவ்யங்கா திரிபாதி சினிமாவில் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து திவ்யங்கா திரிபாதி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
நான் நடிக்க வந்த புதிதில் நிதி நெருக்கடியை சந்தித்தேன். அப்போது ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் நடிக்க ஒரு நிபந்தனை விதித்தனர். அதாவது இயக்குனருடன் கொஞ்சம் நேரத்தை செலவிட வேண்டும் என்றனர். தொழிலில் சகஜமாக நடப்பதுதான் என்றும் கூறினர். இந்த நபர்கள் பொதுவாக புதியவர்களை குறிவைக்கின்றனர்.
கோரிக்கையை ஏற்க நான் மறுத்ததும் அச்சுறுத்தல்கள் வந்தன. நிறைய அழுத்தமும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் எனது முடிவில் நான் உறுதியாக இருந்தேன். வாய்ப்பையும் ஏற்க மறுத்தேன். எனது திறமையில் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026