2025 மே 14, புதன்கிழமை

துப்பாக்கி முனையில் மொடல் அழகி அச்சுறுத்தல்

George   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க மொடல் அழகியும் தொலைக்காட்சி நடிகையுமான கிம் காடர்ஷீயன், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் வைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ​பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிம் காடர்ஷீயன் பாரிஸ் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தபோது, தீடிரென உள்ளே நுழைந்தவர்கள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர்.

ஆயுதங்களுடன் பொலிஸ் சீருடையில் இவர்கள் வந்ததாகவும் எனினும் அவர்கள்  போலியான பொலிஸார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கொள்ளையுடன் தொடர்புடையது என்பதை உறுதி செய்துள்ளதாக பாரிஸின் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கிம் காடர்ஷீயனுக்கு எந்தவித பாதிப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவம் குறித்து பாரிஸ் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .