Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
George / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழகம் முழுக்க அவருக்கு ஏராளமானபேர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலரும் டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோலிவூட் முதல் பொலிவூட் வரை உள்ள திரைத்துறையினரும் பலரும் ஜெயலலிதாவுக்க இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டரில் தெரிவிக்கப்பட்ட இரங்கல் செய்தி
அமிதாப்பச்சன் : 100 வருட இந்திய சினிமாவைக் கொண்டாடிய ஒரே மாநிலத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாஜி. அனைத்துப் பக்கங்களிலிருந்தும் மிகவும் போற்றத்தக்கவர்... ஜெயலிலிதாஜியின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன்.
ஷாரூக்கான் : ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
நடிகர் விஷால் : சிறந்த பெண்மணி, தலைவி, நிர்வாகி, அம்மா, ஜெயலலிதா, இரும்புப் பெண்மணி, சீக்கிரமே மறைந்துவிட்டார். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என் ஆழ்ந்த அனுதாபங்கள், அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
த்ரிஷா : என்னை மிகவும் கவர்ந்தவர். மற்றுமொரு அரியணை வேறு பக்கத்தில் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அவர் படித்த பள்ளியிலேயே நானும் படித்தது மிகவும் பெருமை, அவரைச சந்தித்தது எனக்குக் கிடைத்த கௌரவம்.
சூர்யா : அமைதியாக உறங்குங்கள் மெடம். நம் அனைவரையும் கவர்ந்த, தைரியமான, துணிச்சலான, இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத தலைவர். ஒரு மிகப்பெரும் பெருமையை விட்டுச் சென்றிருக்கிறீர்கள். எங்கள் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
ஹன்சிகா : ஒரு நல்ல இதயம் தனது துடிப்பை நிறுத்திவிட்டது. ஒரு நல்ல ஆன்மா சொர்க்கத்துக்குச் செல்கிறது. நீங்கள் பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறீர்கள்.
காஜல் அகர்வால் : ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் நம் பார்வையிலிருந்து விலகிவிட்டார், ஆனால், நம் இதயத்தில் இருந்து அல்ல...
சிம்பு : இந்த சமயத்தில் எந்த ஒரு வார்த்தையாவது நமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா?. இரும்புப் பெண்மணி, இனி இல்லை.
தனுஷ் : தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முன்மாதிரியான சகாப்தம் நிறைவுக்கு வந்துவிட்டது. ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுவிட்டீர்கள்.
சிவகார்த்திகேயன் : மரியாதைக்குரிய அம்மா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். நிகரில்லா பெண்மணி.
சந்தானம் : தமிழ்நாட்டின் அன்பான முதல்வர், இரும்புப் பெண்மணி ஆன்மா சாந்தியடையட்டும். உங்களிடமிருந்துதுன் நம்பிக்கையைக் கற்றுக் கொண்டோம் மெடம். நீங்கள்தான் மிகச் சிறந்த முன்மாதிரி.
குஷ்பு : மிகப் பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. அந்த இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. நீங்கள் மறைந்து விட்டீர்கள் என்பதை நம்பமுடியவில்லை. நீங்கள் 'வி' முத்திரையை கையசைத்து செல்வதை பார்க்க வேண்டும் போல் உள்ளது.
ராதிகா சரத்குமார் : மரியாதைக்குரிய முதல்வர் மறைவு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. என் மனதிலும் இலட்சோப இலட்சம் மனதிலும் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுவிட்டார் . மக்களின் மனிதர். உற்சாகமான, வலுவான, கம்பீரமானவர், போராளி. அவரைச் சந்தித்தவர்களிடத்தில் அவருடைய உணர்வை விட்டுச் சென்றிருக்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தவர்.
வரலட்சுமி சரத்குமார் : இன்னமும் நம்ப முடியவில்லை. இவ்வளவு சீக்கிரம் மறைந்து விட்டீர்களே. அவரைச் சந்தித்தவள் என்பது எனக்கு மகிழ்ச்சி. உங்களை இழந்து வாடுகிறோம் அம்மா. எங்கள் அனைவருக்கும் ஒளிவிளக்காய் இருந்தவர் நீங்கள். இரும்புப் பெண்மணி.
சரத்குமார் : தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி, தமிழ்நாட்டிலிருந்து பிரதமர் வேட்பாளர் ஆவதற்குரிய நம்பிக்கையைக் கொடுத்தவர் இப்போது நம்மிடம் இல்லை.
கமல்ஹாசன் : சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
இயக்குநர் ராம்கோபால் வர்மா : ஜெயலலிதா இல்லாமல் தமிழ்நாட்டை நினைத்துக கூடப் பார்க்க முடியவில்லை. சூப்பர் ஸ்டாரிலிருந்து, சூப்பர் அரசியல்வாதி வரை...வாவ்...என்ன ஒரு பயணம் ?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் : புரட்சித் தலைவி அம்மாவை நேசிக்கும் அனைத்து மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் மரியாதை.
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா : இரும்புப் பெண்மணிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இசையமைப்பாளர் அனிருத் : மிகச் சிறந்த முன்மாதிரியான தலைவர். மரியாதைக்குரிய முதல்வர் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கடமை உணர்வு மிக்க இரும்புப் பெண்மணி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025