2025 மே 16, வெள்ளிக்கிழமை

தாறுமாறு

George   / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலித் திரைப்படத்தை அடுத்து விஜய் நடித்துவரும் திரைப்படத்துக்கு தாறுமாறு என்ற தலைப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் 59ஆவது திரைப்படமான இந்தத் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்குகின்றார்.

பொலிஸ் அதிகாரியாக விஜய் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். சமந்தா, எமி ஜெக்சன், சத்யராஜ், இயக்குநர் மகேந்திரன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படத்துக்கு, ரஜினியின் நடிப்பில் வெற்றிப்பெற்ற திரைப்படமான மூன்று முகம் என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளதாக முன்னதாக செய்தி வெளியாகியது.

அதையடுத்து காக்கி, வெற்றி, தெறி என பல தலைப்புகள் அட்லி தரப்பில் இருந்து விஜய்க்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இந்நிலையில், தற்போது தாறுமாறு என்ற தலைப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா ராணி எனும் மாபெரும் ஹிட் திரைப்படத்தையடுத்து, அட்லி இயக்கும் இந்தத் திரைப்படம் அவரது இரண்டாவது திரைப்படம் என்பதாலும், திரையுலகில் தாக்குபிடிக்க வெற்றி முக்கியம் என்பதால் மிக மிக அர்பணிப்புடன் விஜயக்கான திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .