J.A. George / 2022 பெப்ரவரி 11 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் இல் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளை திருமணம் செய்து கொண்ட தனுஷ் 18 வருடங்கள் பிறகு அவரை விவாகரத்து செய்துள்ளார்.
இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது பிரபல நடிகை ஒருவரின் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி தன்னுடைய கணவர் ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்ய உள்ளார் என தகவல் பரவி வருகிறது. ஆபாச பட வழக்கில் கைதான ராஜ்குந்த்ரா ஜாமினில் வெளிவந்த நிலையிலும் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஷில்பா செட்டி இதனை மறுத்து வந்தாலும் ராஜ் குந்த்ரா தற்போது தன்னுடைய சொத்துக்களில் பாதியை ஷில்பா செட்டி பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.
மேலும் தன்னுடைய பங்களா ஒன்றையும் அவருடைய பெயருக்கு மாற்றி உள்ளார். இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள உள்ளனர் என சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago