2025 மே 14, புதன்கிழமை

தமிழ் சினிமாவின் புதுப்பேய்

George   / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் உள்ள நடிகைகள் பேய்த் திரைப்படங்களைத் தேடித் தேடி நடிக்கிறார்கள். நயன்தாரா, த்ரிஷா முதல், அறிமுகமாகும் நடிகை வரை, பேய்த் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறார்கள்.

“அட்டக்கத்தி” முதல் “காக்கா முட்டை” வரை நல்ல கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷும், “மோ” என்ற திரைப்படத்தில் பேயாக நடித்திருக்கிறார்.   

இயக்குநர்களான செல்வா, ஹோசிமினிடம் உதவியாளராக இருந்த புவன் ஆர்.நல்லான் இயக்கி உள்ள திரைப்படம் “மோ”. இதில் ஐஸ்வர்யா ராஜேஷுடன், சுரேஷ் ரவி, யோகிபாபு, முனீஷ்காந்த், ரமேஷ் திலக், தர்புகா சிவா, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.   

ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர் சந்தோஷ் தயாநிதி, இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியத்தின் உதவியாளர் விஷ்ணு, ஒளிப்பதிவு செய்கிறார். ரோகில் ரமேஷ் தயாரிக்கிறார்.   

“மோ, பேய்த் திரைப்படமாக இருந்தாலும் பயமுறுத்துகிற திரைப்படம் இல்லை. நகைச்சுவைத் திரைப்படம். பேயாகி பயமுறுத்தும் ஒரு பெண்ணுக்கும், பேயை விரட்டுகிறோம் என்று கிளம்புகிற ஓர் இளைஞர் கூட்டத்துக்கும் இடையே நடக்கிற நகைச்சுவைதான் திரைப்படம். சிரிக்க வைத்துக் கொஞ்சம் பயமுறுத்தும் கதை” என்கிறார் இயக்குநர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X