2025 மே 17, சனிக்கிழமை

தமிழ் சினிமாவில் முதன்முறையாக... புதுஜோடி!

George   / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷ், த்ரிஷா இருவரும் இதுவரை எந்தத் திரைப்படத்திலும் இணைந்து நடித்ததில்லை என்றாலும், இருவரும் நெருங்கிய நண்பர்கள். எந்தளவுக்கு நெருக்கமான நண்பர்கள் தெரியுமா? வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தபோது, தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க விரும்பினார் த்ரிஷா.

இந்நிலையில், 'விருந்துக்கு யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள், ஆனால் தனுஷை மட்டும் அழைக்கக்கூடாது' என்று வருண்மணியன் கூற, அவர் பேச்சை மீறி தனுஷை விருந்துக்கு அழைத்தார் த்ரிஷா. 

அதுதான் வருண்மணியன்-த்ரிஷா இடையே சண்டை ஏற்பட்டு திருமணம் இரத்து ஆகவும் காரணமானது என்று திரையுலகில் கூறப்படுகின்றது.நம்மால் தன்னுடைய மண வாழ்க்கையையே இழந்துவிட்டாரே என்பதாலோ என்னவோ, தான் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்தில். த்ரிஷாவுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார் தனுஷ். 

தங்கமகன் மற்றும் பிரபு சொலமன் இயக்கும் திரைப்படங்களைத் தொடர்ந்து, துரைசெந்தில் குமார் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்தத் திரைப்படத்தில் தனுஷ், அண்ணன் - தம்பி என இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இதில் அண்ணன் பாத்திரத்துக்கு ஜோடியாக நடிக்கவே  த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம். தனுஷுடன் த்ரிஷா நடித்தாலும் அவர் பாத்திரத்தைவிட தம்பி பாத்திரத்தில்; நடிக்கும் தனுஷின் ஜோடியாக நடிப்பவருக்கே அதிக முக்கியத்துவம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. எப்படியோ.. தமிழ் சினிமாவுக்கு புது ஜோடி கிடைத்துவிட்டது...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .