2025 மே 17, சனிக்கிழமை

தயாராகிறது தெலுங்கு டைட்டானிக்

Administrator   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகுபாலிக்கு பிறகு உலக சினிமாவின் கவனம் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது. பாகுபலியின் பட்ஜெட்டும், அது கொடுத்த வசூலும், உலக தரத்துக்கு நம்மாலும் சினிமா தர முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

அந்த நம்பிக்கையில் அடுத்து உலக புகழ்பெற்ற டைட்டானிக் திரைப்படத்தைப் போன்ற ஒரு திரைப்படத்தை தெலுங்கில் எடுக்க இருக்கிறார்கள். இதில் ராணா ஹீரோவாக நடிக்கிறார்.

1971ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தபோது பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான பிஎன்எஸ் ஹாஜி என்ற நீர்மூழ்கி கப்பல் கடலில் முழ்கி அதில் இருந்த அனைவரும் இறந்து போனார்கள்.

இந்த சம்பவத்தை கருவாக கொண்டு சங்கல்ப் என்ற இளைஞர் ப்ளூபிஷ் என்ற தலைப்பில் திரைக்கதை எழுதியுள்ளார். அதனையே திரைப்படமாக்க உள்ளனர்.

இயக்குபவரும் சங்கல்ப் ரெட்டிதான். ராணா கப்பல் கெப்டனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறன.

இதற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பல கோடி ரூபாய் செலவில் நீர்மூழ்கி கப்பல் செட் போடப்படுகிறது.

பெரும்பாலான காட்சிகள் நீர்மூழ்கி கப்பலுக்குள்ளேயே எடுக்கப்படவுள்ளதுடன் படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி இந்திய ரூபாய் என கூறப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .