2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

தயாரிப்பு பணியில் களமிறங்கும் இனியா

Freelancer   / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் எம். ராஜேஷின் உதவி இயக்குனரான துரை கே முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சீரன்'. ஜேம்ஸ் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சோனியா அகர்வால், இனியா, ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்ரமணி, ஆரியன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Netco Studios சார்பில் ஜேம்ஸ் கார்த்திக் மற்றும் நியாஸ் தயாரிப்பில் சமூக அக்கறை கொண்ட கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள 'சீரன்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை இனியா பேசியதாவது, இந்தப் படத்தில் பூங்கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக எடை கூட்டிக் குறைத்து நடித்துள்ளேன். நான் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் படத்தில் பாடல் காட்சிகளில் நடிக்கும் போது சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஒரு திறமையான தயாரிப்பாளர் மற்றும் நல்ல நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.



நான் இவரைப் பார்த்து சில தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ள உள்ளேன். இயக்குனர் மிகவும் பக்குவம் நிறைந்தவர், அவருக்குத் தேவையானது என்ன என்பதில் தெளிவாக இருந்தார். பல பிரச்சனை நடந்தாலும் எந்த விஷயங்களும் படத்தைப் பாதிக்காதவாறு இந்தப் படத்தை அருமையாக உருவாக்கியுள்ளார். அதே போல ஒளிப்பதிவாளர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். மேலும் இந்தப் படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்று பேசினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X