Freelancer / 2022 மே 23 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்திக்க விஜய் சென்றபோது உள்ள கெட்டப் தான் 'தளபதி 66' படத்தின் விஜய் கெட்டப் என்று கூறப்பட்டது. இந்த கெட்டப்பில் அவர் இளமையான தோற்றத்தில் இருந்தார் என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் , 'தளபதி 66' படப்பிடிப்பின்போது விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் விஜய் சற்று வயதான மற்றும் மாறுபட்ட ஹேர்ஸ்டைல் கெட்டப்பில் இருப்பதை அடுத்து இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிப்பது உறுதி செய்யப்பட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
'ஹாய் செல்லம்' நாங்கள் மீண்டும் திரும்பி விட்டோம்' என பிரகாஷ்ராஜ் பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், சம்யுக்தா, யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026