2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

தளபதி ரசிகர்களுக்கு புதுவருட பரிசு

Freelancer   / 2026 ஜனவரி 01 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகயுள்ளது.

'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், விஜய்யின் நடிப்பில் வெளியாகும் கடைசித் திரைப்படம் இது என்பதால் இந்த திரைப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இன்று புத்தாண்டு என்பதால் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் எதிர்வரும் 3 ஆம் திகதி மாலை 6.45 க்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X