2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினி

J.A. George   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரையுலகினருக்கு இந்திய மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.

2019ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது.  இந்த நிலையில், டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று (25)  நடைபெற்றது.

இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். இதனையடுத்து, சமூக வலைத்தளத்தில் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விழாவில் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது, விஜய் சேதுபதிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது, 'ஒத்த செருப்பு' திரைப்படத்துக்காக பார்த்திபனுக்கு சிறந்த நடுவர் தேர்வு விருது, ’கேடி (எ) கருப்புதுரை’ திரைப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, ’விஸ்வாசம்’ திரைப்படத்துக்காக இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது ஆகியவையும் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .