2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தான் செய்யும் உதவிகளை வெளிப்படுத்த விரும்பாத சூப்பர் ஸ்டார்

Editorial   / 2018 மார்ச் 28 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீர்த்தி சுரேஷ் - போபி சிம்ஹா நடித்த பாம்புச் சட்டை திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் எடம் தாசன். பெரிய சினிமா பின்புலம் கிடையாத இவர், இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவியாளராகப் பணியாற்றி வந்தபோது தான், பாம்புச் சட்டை திரைப்பட வாய்ப்பைப் பெற்றார்.

திரைப்படம் வெளியாகி, அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிலையில், அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்து தனது திருமணம் குறித்து தகவல் கூறியுள்ளார் இயக்குநர் எடம்தாசன். ஆனால், அவரிடம் நாளை வந்து பாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டாராம் ரஜினிகாந்த். இது எடம் தாசனுக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது. தன் திருமண அழைப்பிதலை, சூப்பர் ஸ்டாரிடம் கொடுக்க முடியாமல் போய்விட்டதே எனது வருந்தினாராம் அவர்.

ஆனால் அடுத்த நாள் நடந்ததைப் பார்த்து, எடம் தாசன் திக்குமுக்காடி போய்விட்டாராம். ஆம்... அடுத்தநாள் ரஜினிகாந்தைச் சந்தித்து தன் திருமண அழைப்பிதழைக் கொடுத்த போது, சூப்பர் ஸ்டார், எடம் தாசின் கையில் ஒரு கவரை கொடுத்துள்ளார். அதைப் பிரித்து பார்த்தபோது, அதனுள் 3 இலட்சம் ரூபா இந்திய பணம் இருந்துள்ளது.

இதனைப் பார்த்த தாசனோ, மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டாராம். அந்தப் பணம், அவரின் திருமணத்துக்கு மிகவும் உதவியாக இருந்ததாம்.

இப்படி ரஜினிகாந்த் பலருக்கு இதுபோன்ற பல உதவிகள் செய்திருந்தாலும், அதனை வெளியில் தெரிய விடுவதில்லை என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .