Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூலை 30 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவைத் திருமணம் செய்துகொண்ட சமந்தா, தற்போதும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
சமந்தாவின் கைவசம் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன.
மேலும் சமூக வலைதளங்களில் மும்முரமாக இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். அவரை டுவிட்டரில் 89 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சமந்தா, தனது சமூக வலைதள பக்கங்களில் திடீரென பெயரை மாற்றி உள்ளார். இதற்கு முன் சமந்தா அக்கினேனி (samantha akkineni) என இருந்த நிலையில், தற்போது எஸ் (S) என மாற்றி உள்ளார். இருப்பினும் திடீர் பெயர் மாற்றத்துக்கான காரணத்தை நடிகை சமந்தா வெளியிடவில்லை.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago