2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தீப்பெட்டி கணேசன் காலமானார்

J.A. George   / 2021 மார்ச் 22 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரேணிகுண்டா உள்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார். 

இவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பெட்டி கணேசன் காலமான தகவலை இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். 

அவர் தனது டுவிட்டரில், “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா” என்று குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் தீப்பெட்டி கணேசன் வறுமையில் இருந்ததாகவும் நடிகர் சங்கம் மற்றும் பிரபல நடிகர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X