J.A. George / 2021 ஜூன் 01 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்த திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66ஆவது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த திரைப்படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இயக்குநர் வம்சி பைடி பல்லி சமீபத்திய பேட்டியில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இந்தபடத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வம்சி ஏற்கெனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா திரைப்படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago