2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

த்ரிஷாவுக்கு சர்ப்ரைஸ்

J.A. George   / 2023 மே 09 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் பணிகளுக்கு சென்றிருந்த நடிகை த்ரிஷா தற்போது ’லியோ’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்து உள்ளார்.

அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த போது படக்குழுவினர் அவருக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக பிறந்தநாள் கேக் ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த நான்காம் திகதி நடிகை த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் விஜய்யுடன் த்ரிஷா இருக்கும் சிறப்பு போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ’லியோ’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த போது பிறந்தநாள் கேக் ஏற்பாடு செய்து அவரை சர்ப்ரைஸ் அடைய செய்தனர். இதனை அடுத்து அந்த கேக்கை வெட்டி ’லியோ’ படக்குழுவினர்களுடன் நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X