Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 நவம்பர் 18 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
டங்கல் திரைப்பட படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் நிலைகுலைந்து விழுந்த அமீர்கானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது தான் நலமாக உள்ளதாக அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மல்யுத்தத்தை மையமாக கொண்ட டங்கல் திரைப்படத்தில் மல்யுத்த வீரனாக நடித்து வரும் அமீர்கான், தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்து வந்ததுடன் அதுவே, அவருக்கு ஆபத்தாகிவிட்டது.
பஞ்சாபில் படப்பிடிப்பு நடந்து வந்தபோது திடீரென்று வலி தாங்க முடியாமல் அமிர்கான் சுருண்டு விழ, திரைப்படக்குழு அதிர்ச்சியில் உறைந்தது.
அதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அமீர்கானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், டுவிட்டரில் கருத்து தெரிவித்த அமீர்கான், 'நான் நலமாக உள்ளேன், இது பெரிய காயம் இல்லை. முதுகில் தசை பிடிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஒரு வார ஓய்வுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பு தொடரும்' என கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .