2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நடிகர் சங்க கணக்கு விவரம் இணையத்தில் வௌியானது

George   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சங்க கணக்கு விவரங்கள், அனைவரும் பார்க்கும் வகையில், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நடிகர் சங்க நிலத்தின் மீது இருந்த கடனை அடைத்து விட்டோம். நாங்கள் ஊழல் செய்துள்ளதாக, சிலர் வீண் பழி சுமத்துகின்றனர். நட்சத்திர கிரிக்கெட் உட்பட, இதுவரையிலான சங்க கணக்குகளை, நடிகர் சங்க இணையதளத்தில், நாளை (இன்று) சங்க பொருளாளர் கார்த்தி வெளியிடுகிறார். அதை புகார் கூறுவோர் மட்டுமின்றி, அனைவரும் பார்க்கலாம்” என்று விஷால், நேற்று தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்றைய தினம் குறித்த கணக்கு விவரங்களை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் வரவு - செலவு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2016, ஏப்ரல் முதல் ஓகஸ்ட் வரையிலான கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் அதில் சங்கத்துக்கு, கிரிக்கெட் போட்டி நடத்தியதன் மூலம் கிடைக்கப்பட்ட வருவாய் இந்திய ரூ.12,57,62,776 என்றும், சங்க நிலம் மீட்பு, கிரிக்கெட் நடத்திய செலவு இந்திய ரூ.4,10,61,942 என்றும், மீதம் இந்திய ரூ.8,47,00,834 இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஸ்டார் கிரிக்கெட் நிதி சுருக்கம் (SIAA)


நடிகர் சங்கம் அறக்கட்டளையின் ஸ்டார் கிரிக்கெட் நிதி சுருக்கம் (NSCT)

​கணக்கு விவரங்களை தௌிவாகப் பார்க்க மேலேயுள்ள இணைப்பு அல்லது படங்களை அழுத்தவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .