2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நட்சத்திர ஹோட்டலில் அசின் திருமணம்

George   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை அசின் - மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ராகுல்சர்மா ஆகியோரின் திருமணம், டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில், எதிர்வரும் நவம்பர் மாதம் 26ஆம் திகதி  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தை டெல்லியில் நடத்த ராகுல்சர்மா குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அசின்-ராகுல் சர்மா திருமணத்துக்கு இரண்டு குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கிறது.

இதேவேளை, 27ஆம் திகதி, டெல்லியில் வெஸ்ட் என்ட் கிரீன்ஸ் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அசின்-ராகுல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், முன்னணி நடிகர்–நடிகைகள், திரை உலக கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். 

இதைத் தொடர்ந்து, நவம்பர் 28 அல்லது 29ஆம் திகதி, அசின்–ராகுல் சர்மா வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில், நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .