2025 மே 17, சனிக்கிழமை

நட்சத்திரத் தீபாவளி

George   / 2015 நவம்பர் 10 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபங்களின் ஒளி நிறைந்த தித்திக்கும் தீபாவளியை உலக வாழ் மக்கள் இன்று பெரும் விமரிசையாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், உங்கள் அபிமான திரை நட்சத்திரங்கள் எப்படி இன்றைய தீபாவளியை கொண்டாடுகிறார்கள் என்று அறிய ஆவலாய் இருப்பீர்கள். இந்தத் தீபாவளியை தாங்கள் எப்படி கொண்டாடுகின்றோம் என்று அவர்களே சொல்கிறார்கள்.

விஜய் சேதுபதி

நிறைய தீபாவளியை கொண்டாடி இருக்கிறேன். ஆனால், இந்தத் தீபாவளி சிறப்பாக அமைந்துள்ளது. நானும் ரௌடிதான்... திரைப்படத்தைத் தொடர்ந்து, காதலும் கடந்து போகும், இறைவி, சேதுபதி ஆகியத் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். இந்தாண்டு சேதுபதி படப்பிடிப்பில் இருப்பதால், தீபாவளியை மதுரையில் தான் கொண்டாடுவேன் என நினைக்கிறேன். நானும் ரௌடிதான் திரைப்படத்தின் முடிவுக்காக மிகவும் பயந்து கொண்டிருந்தேன். ஆனால், அதன் வெற்றி எனக்கு அதிக நம்பிக்கை தந்துள்ளது.

கிருமி கதிர்

எனது சொந்த ஊர் கோவை. கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடியவில்லை. ஆனால், இந்தாண்டு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட போகிறேன். நான் சிறுவயது முதலே பட்டாசு வெடிப்பதில்லை. இந்தாண்டு எனக்கு சந்தோஷமான தீபாவளியாக அமைந்துள்ளது.

அவன் இவன் ஜனனி அய்யர் 

கடந்தாண்டு தீபாவளியை கேரளாவில் படப்பிடிப்பில்தான் கொண்டாட முடிந்தது. இந்தாண்டு சென்னையில் வீட்டில் அம்மாவின் கேசரி இனிப்புடன் நான் எடுத்த இரண்டு சல்வார் அணிந்து, குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடப்போகிறேன்.

நடிகர் பிரசாந்த் 

எத்தனை தீபாவளி கொண்டாடினாலும், தீபாவளி என்ற சொல்லை கேட்டாலே தனி உற்சாகம் பிறந்து விடும். சிறுவயதில், பட்டாசுகளை அதிகமாக வெடிப்பேன். வீட்டை சுற்றி குப்பை மயமாக இருக்கும். அதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை அறிந்த பின் பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டேன். அம்மா செய்யும் இனிப்போடு, இந்தாண்டு சாகசம் திரைப்படக்குழுவினரோடு தீபாவளி கொண்டாடப்போகிறேன்.

பில்லா ருக்மணி

எனது சொந்த ஊர் பெங்களூரூ. எனது வாழ்க்கையில், பயணத்திலேயே 80 சதவீதம் சென்று விடும். நான் தற்போது அமெரிக்காவில் நடன நிகழ்ச்சியில் இருக்கிறேன். இந்தாண்டு தீபாவளிக்கு முதல் நாள் தான் இந்தியா வருகிறேன். இந்தாண்டு குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடப்போகிறேன்.

சங்கராபரணம் துளசி

நான் திருமணமாகி பெங்களூரூவில் தங்கிவிட்டேன். தெலுங்கில் மகேஷ்பாபு திரைப்படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் படப்பிடிப்பில் இருப்பதால், இந்தாண்டு தீபாவளியை, வீட்டில் கொண்டாட முடியாது. வேலையும் முக்கியமல்லவா. எனது கணவரையும் மகனையும் வீட்டில் விளக்கேற்றி, தீபாவளி கொண்டாட கூறியுள்ளேன். இந்தாண்டு தீபாவளி படப்பிடிப்பு தளத்தில்தான்

நடிகை லைலா

நான் மும்பையில் இருப்பதால், தமிழ் ரசிகர்களை அதிகம் மிஸ் பண்ணுகின்றேன். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை அதிக முறை படப்பிடிப்பில் கொண்டாடி உள்ளேன். நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவள் என்பதால், நான் வீட்டில் தீபாவளி கொண்டாடுவது இல்லை. ஆனால், பக்கத்து வீடுகளில் தீபாவளி கொண்டாடி இனிப்புகளை பகிர்ந்து கொள்வர். ஆர்யா, சூர்யா, கார்த்தி, அஜீத் ஆகியோருக்கு எனது தீபாவளி வாழ்த்துகள். அண்மையில், நடந்த நடிகர் சங்க தேர்தலில் நான் தபால் ஓட்டை பதிவு செய்துள்ளேன்.

நடிகை வேதிகா 

பிரபுதேவா தயாரிப்பில், வினோதன் திரைப்படம் ஷூட்டிங்கில் உள்ளேன். மலையாளத்தில் ஒரு திரைப்படம், சிவராஜ் குமாருடன் கன்னட திரைப்படம் என கொஞ்சம் பிஸியாக உள்ளேன். தீபாவளிக்கு காளஹஸ்தி போக உள்ளேன். மும்பை, பெங்களூரில் வீடு உள்ளது. மும்பையில் பூஜை முடித்துவிட்டு பெங்களூர் வந்துவிடுவேன். அம்மா செய்யும் லட்டு ரொம்ப பிடிக்கும். அனார்கலி டிரஸ் வாங்கியுள்ளேன். இந்த தீபாவளியை ரொம்ப சிறப்பாக கொண்டாடுவேன்.

ஆனந்தி 

பண்டிகை திரைப்படத்தின் ஷூட்டிங்கில் உள்ளேன். வாராங்கலில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட போறேன். காக்ரா டிரஸ் எடுத்து வைத்துள்ளேன். இந்த தீபாவளி வர்ணமயமான தீபாவளியாக இருக்கும். 

இவ்வாறு உங்கள் அபிமான திரை நட்சத்திரங்களில் சிலர், இந்த தீபாவளி பண்டிகையை தாம் கொண்டாடும் விதம் பற்றி கூறியுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .