2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் பல ஆண்டுகள் கழித்து வெளியான அதிர்ச்சி தகவல்

J.A. George   / 2023 நவம்பர் 14 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மற்றும் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியான பல திரைப்படங்களில் வில்லன், குணசித்திர கதாபாரத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் கலாபவன் மணி. 

மிமிக்கிரி கலைஞராக வாழ்க்கையை தொடங்கியவர், கடந்த 1999ல் வெளியான வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்திற்காக அவருக்கு தேசிய அளவிலான விருதும் வழங்கப்பட்டது. 

மலையாளத்தில் தேசிய விருது வாங்கிய முதல் நடிகர் அவர் மட்டுமே. கடந்த 2002ம் ஆண்டு சிறந்த வில்லனுக்கான பிலிம்பேர் விருதும் அவர் பெற்றுள்ளார். தனது திரையுலக வாழ்க்கையில் 30 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். 

மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் எண்ணிக்கையை சேர்ந்தால் எண்ணிக்கை பலநூறு கடக்கும். கடந்த 2016ம் ஆண்டு அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பாபநாசம் படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்து அசதியும் இருந்தார். 

இந்நிலையில், நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு மதுப்பழக்கம் காரணம், தினமும் அவர் 12 முதல் 13 பீர் குடித்ததே மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மணிக்கு, கல்லீரல் செயலிழந்தபோதும் குடிப்பழக்கத்தை கைவிடவில்லை. மரணமடைந்த நாளிலும் 12 பீர் அருந்தியிருந்தார் என கேரளாவின் ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்துள்ளார். 

2016 மார்ச் 6ம் தேதி கலாபவன் மரணம் அடைந்தார். அவரின் மரணம் நிகழ்ந்து இன்றோடு 7.5 ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போதுதான் அவரின் மரணத்திற்கான காரணம் ஐபிஎஸ் அதிகாரியால் விழிப்புணர்வுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .