Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 செப்டெம்பர் 22 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமா தயாரிப்பு நிறுவன ஊழியரைத் தாக்கியதாக, நடிகை பார்வதி நாயர் உட்பட 6 பேர் மீது தேனாம்பேட்டை பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி மேலும் தெரியவருகையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர், தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது, அந்நிறுவனத்தின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயர் வீட்டில் அவ்வப்போது சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு பார்வதி நாயர், தனது வீட்டில் இருந்த விலை உயர்ந்த கடிகாரம், மடிக்கணினி மற்றும் கைபேசி திருடு போனதாகவும், தனது வீட்டில் வேலை செய்யும் சுபாஷ் சந்திரபோஸ் மீது சந்தேகம் இருப்பதாகவும் நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சுபாஷ் சந்திரபோஸை பொலிஸார் கைது செய்தனர். பின்னர், வெளியே வந்த அவர், மீண்டும் அதே சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அப்போது, அந்நிறுவனத்துக்கு பார்வதி நாயர் மற்றும் அவரது நண்பர்கள் வந்ததாகவும், அவர்கள் சுபாஷ் சந்திர போஸைத் தாக்கியதாகவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார். ஆனால், தேனாம்பேட்டை பொலிஸார் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திர போஸ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுபாஷ் சந்திரபோஸின் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, தேனாம்பேட்டை பொலிஸார், நடிகை பார்வதி நாயர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.S
8 hours ago
8 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Aug 2025