George / 2015 நவம்பர் 17 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இதுவரை நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்தபோதும் தெலுங்கில் நடித்த ஸ்ரீ ராமராஜ்ஜியம் திரைப்படம்தான் எனக்கு மனதளவில் திருப்தியை கொடுத்தது. அதனால், அந்த மாதிரி இன்னொருத் திரைப்படம் கிடைத்தால் உடனே கோல்சீட் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று நடிகை நயன்தார கூறியுள்ளார்.
தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட அனாமிகா திரைப்படத்தில் நடித்து முடித்தபோது நயன்தாராவை திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோது மறுத்து விட்டார்.
இதனால், அத்திரைப்படத்தின் இயக்குநர் சேகர் கமுலா, நயன்தாரா மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, ஒருவருடம் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்க நயனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, தமிழ் திரைப்படங்களின் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வரும் நயன்தாராவை தேடி தற்போது சில தெலுங்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
ஆனால், தமிழில் பலத் திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதை காரணமாக சொல்லி தெலுங்கு வாய்ப்புக்களை தட்டிக்கழித்து வருகிறாராம்.
இருந்தாலும், ஸ்ரீ ராமராஜ்ஜியம் திரைப்படத்தை போல இன்னொரு திரைப்படம் கிடைத்தால் நடிக்கின்றேன் என்றும் கூறுகின்றாராம்.
ஆக, விரைவில் ஒரு பக்தி திரைப்படத்தில் படத்தின் ஊடாக தெலுங்கு சினிமாவில் நயன்தாரா மீள்பிரவேசம் செய்வார் போலத் தெரிகின்றது.
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago