Menaka Mookandi / 2016 நவம்பர் 18 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

வழக்கமாக டொப் ஹீரோக்களின் பிறந்த நாளன்று தான், திரைப்படங்களின் தலைப்பு, டீசர், டிரெய்லர், பாடல்கள் என வெளியிடுவார்கள். ஆனால் முதல்முறையாக, அந்த கௌரவம், ஒரு ஹீரோயினுக்குக் கிடைத்திருக்கிறது. அவர் நயன்தாரா.
இன்று நயன்தாராவின் பிறந்தநாள். இதையொட்டி, நேற்று வியாழன் நள்ளிரவே அவர் நடித்துள்ள திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டன.
மீஞ்சுர் கோபி எனும் கோபி நயினார் இயக்கும் இந்தத் திரைப்படத்துக்கு, “அறம்” என்று தலைப்பிட்டுள்ளனர். கதாநாயகியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டுள்ள இத்திரைப்படத்தின் விளம்பரங்கள், இன்று முதல் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இந்தத் திரைப்படத்தில், ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் நயன்தாரா. ராமநாதபுரம் மாவட்டப் பின்னணியை களமாகக் கொண்ட இப்படத்துக்காக, அவ்வப்போது அங்கேயே தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் நயன்தாரா. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். யார் இந்த மீஞ்சூர் கோபி என்று கேட்பவர்களுக்கு, விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று கோரி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்ததோடு, மீடியாக்களிலும் நியாயம் கேட்டவர் இந்த கோபி நயினார் என்று கூறிக்கொள்கிறோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .