R.Tharaniya / 2025 மார்ச் 17 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை நயன்தாரா சென்னை மையப்பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ள நிலையில், அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறன.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, அவர் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக அவர் ஸ்டூடியோவை ஆரம்பித்துள்ளார். அதாவது, சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஒரு பங்களாவையே அவர் ஸ்டுடியோவாக மாற்றியுள்ளார். படப்பிடிப்புக்கு தேவையான முக்கிய அம்சங்கள் இந்த ஸ்டூடியோவில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த ஸ்டூடியோவில், ரசனை மிகுந்த உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதுடன், கைவினைப் பொருட்கள், விசாலமான மாடி அறைகள், ஜொலிக்கும் வெளிச்ச ஏற்பாடுகளுடன் இந்த ஸ்டூடியோ வடிவமைக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்புகள் சிறப்பான நடத்த ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
47 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
1 hours ago