Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 29 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபலமான நாட்டுப்புறப் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா 76ஆவது வயதில் காலமானார்.
சில காலமாகவே பரவை முனியம்மாவின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
ஆனால், அனைத்தையும் தாண்டி சிகிச்சை பெற்று நலமாக இருந்தார். சில நாள்களுக்கு முன்பாக அவருடைய உடல்நிலை மோசமானதால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள்.
கடும் மூச்சுத் திணறலால் அவருடைய உடல்நிலை நேற்றிரவு (28) மோசமடைந்தது. இதனால் அவரை இன்று (29) அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். அவருடைய உயிர் 3 மணியளவில் பிரிந்தது.
அருள் படத்தில், “சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...” என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பரவை முனியம்மா.
ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.
தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago