Freelancer / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கு நடிகரான நானி, தசரா படத்தைத் தொடர்ந்து தனது 30வது படமான 'ஹாய் நான்னா' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, அறிமுக இயக்குநர் சவுரியா இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இப் படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் டிசெம்பர் 7 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இப் படத்தையடுத்து தன்னை வைத்து ஏற்கனவே இயக்கிய 'அடடே சுந்தரா' பட இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் நானி.
இப் படத்தை ஆர்.ஆர்.ஆர் பட தயாரிப்பு நிறுவனமான டி.வி.வி. தனய்யா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் வில்லன் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே. சூர்யா, நானியுடன் மோத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago