2025 நவம்பர் 19, புதன்கிழமை

நிஜமும்... நிழலும்... மெழுகு சிலையாக காஜல்

Editorial   / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால், ‛இந்தியன் 2 படத்தில் கமல் உடன் நடித்து வருகிறார். 

உலகளவில் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு மெழு சிலை வைக்கப்பட்டுள்ளது. 

சில மாதங்களுக்கு முன் காஜலின் உடல் அங்கங்களை அளவீடும் பணி நடந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. 

குடும்பத்தாருடன் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த காஜல், தனது சிலையைப் பார்த்து மெய்மறந்து போனார். 

அதனருகே நின்று போட்டோ எடுத்தவர், அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X