Freelancer / 2024 ஜூன் 11 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் திருச்சூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து திரையுலகினர் பலரும் சுரேஷ் கோபிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், மலையாள நடிகை நிமிஷா சஜயன் சமூக வலைத்தள தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது, ‘எனக்கு திருச்சூர் வேண்டும். எனக்கு திருச்சூரை தரணும்’ போன்ற கோஷங்களை சுரேஷ்கோபி மக்களிடம் முன்வைத்திருந்தார். இதே கோஷங்களை கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த தேர்தலில் சுரேஷ் கோபி தோல்வியை தழுவினார். இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிஏஏ மசோதாவை எதிர்த்து கேரளாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நிமிஷா சஜயன், ‘எப்படி திருச்சூர் வேண்டும் என்று கேட்டவருக்கு திருச்சூரை நாம் கொடுக்கவில்லையோ, அதேபோல இப்போது இந்தியா வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் நாம் அதை கொடுக்கக்கூடாது’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சுரேஷ் கோபி தற்போது வெற்றி பெற்ற நிலையில், அவரது இரசிகர்களும் கட்சி தொண்டர்களும், நிமிஷாவின் சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான மற்றும் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு சைபர் தாக்குதலில் இறங்கியுள்ளனர்.
நிமிஷா சஜயன், தமிழில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா, மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S
3 hours ago
9 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
16 Jan 2026