Editorial / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுத்திரகனி இயக்கிய ‘போராளி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ‘ஜில்லா’ திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார்.
தொடர்ந்து 2015ஆம் ஆண்டு வெளியான ‘பாபநாசம்’ திரைப்படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் ‘தர்பார்’ திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இந்த நிலையில், அவர் அளித்துள்ள செவ்வியில், "வாழ்க்கையில் எல்லோரும் காதலிக்க வேண்டும் என்ற அவசியமோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை. நான் நேரம் வரும்போது சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன். இப்போது எனக்கு திருமணம் பற்றிய எண்ணம் இல்லை. காதலிக்க நேரமும் இல்லை.
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். எதிர்காலத்தில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுகளோடு நான் இருக்கிறேன். ஆனால் வரப்போகிற கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதில் சில எதிர்பார்ப்புகள் வைத்துள்ளேன்.
அவர் உண்மையாக இருக்க வேண்டும். யாரும் உண்மையாக இருப்பவர்களைத்தான் விரும்புவர். இல்லாதபோது ஒருமாதிரி பேசி விட்டு நேரில் வேறு மாதிரி பேசுபவர்களை பிடிக்காது. கணவராக வருகிறவர் எனது பொறுப்புகளை பகிர்ந்துகொள்பவராகவும், பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்" இவ்வாறு நிவேதா தாமஸ் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .