Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட நாள்களுக்குப்பின் கடுமையாக உடற்பயிற்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.
மாடலிங் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் சாக்ஷி அகர்வால். ‘ராஜா ராணி’ படத்தில் மிகச்சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் தன் சினிமா வாழ்வைத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் சாக்ஷி நடித்தாலும், மக்களிடம் ரீச் ஆகும் அளவுக்கு அவர் கதாபாத்திரங்கள் அமையவில்லை.
‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாகவும், ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து பணிபுரிபவராகவும் நடித்த பின்னர் மக்களிடம் சாக்ஷிக்கு அறிமுகம் கிடைத்தது.
மேலும், ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டதால் உடனடியாக தமிழ் மக்களிடம் பிரபலமானார். 49 நாட்கள் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்த அவர், குறைவாகக் கிடைத்த வாக்குகளால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதுதவிர, கன்னடம் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு கடுமையாக உடற்பயிற்சி செய்ததாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
லேசாக அரும்பிய வியர்வையுடன் அவர் பதிவிட்டுள்ள புகைப்படம், ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ஆர்யா, சயீஷா இணைந்து நடித்துள்ள ‘டெடி’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், ‘அரண்மனை 3’, ‘சிண்ட்ரெல்லா’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .