George / 2016 ஜூலை 16 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் மொடல் அழகியும் சமூக வலைத்தள பிரபலமான குவான்டின் ப்ளோஜ், அவரது சகோதரனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாகாணம் முல்தான் எனும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கொலை கௌரவக் கொலை என தெரிவிக்கப்படுகின்றது.
26 வயதான குறித்த மொடல் அழகி, நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இவரது இயற்பெயர் பௌசியா அஷீம். பாகிஸ்தானில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். அத்துடன் மொடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார்.
மொடலிங்கில் ஈடுபட ஆரம்பித்தவுடன் தனது பெயரை குவான்டின் ப்ளோஜ் என்று மாற்றிக் கொண்டார்.
மொடலிங்கில் அவருக்கு கிடைத்த புகழை விட சமூக வலைதளஙகளில் அவரால் வெளியிடப்பட்ட அவரது வீடியோக்கள் மற்றும் செல்பி புகைப்படங்கள் மூலம் அவரது ரசிகர் கூட்டம் பெருகியது. அத்துடன் அவரது சர்ச்சைக்குரிய சுய விளம்பரம் தேடும் கருத்துக்கள் மூலமும் புகழ்பெற்றார்.
குறிப்பாக பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பின.
தொடர்ந்து முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து அவர் வெளியிட்ட வீடீயோ, ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெற்ற சமயத்தில் இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் பாகிஸ்தான் வீரர்களை விமர்சித்தும் அவர் கருத்துக்களை கூறி இருந்தார்.
வெளியில் பெரிய அளவில் புகழ் பெற்ற போதும் அவரது மொடலிங் தொழில் மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகளுக்கு அவரது குடும்பத்தார் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. மொடலிங் தொழிலை விட்டு விலகும்படி அவரது சகோதரர் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்பகிறது.
இதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு முன்பாக தனது உயிருக்கு அச்சறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு தரும்படியும் கூறி, பொலிஸாருக்கு ப்ளோஜ் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில்தான் வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை தலைவர் அசார் அக்ரம் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, 'குவான்டின் ப்ளோஜ் கழுத்து நெறிப்பட்டு மூச்சுத்திணறலால் இறந்துள்ளார். வாசிம் என்னும் அவரது சகோதரர்தான் இந்த கொலையை செய்திருப்பதாகத் தெரிகிறது. அவர் தபபி ஓடி விட்டார் .இது ஒரு கௌரவக் கொலையாக இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .