2025 மே 12, திங்கட்கிழமை

பீட்டாவுக்கு சதீஷ் கண்டனம்

George   / 2017 ஜனவரி 22 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை மெரீனாவில் சல்லிக்கட்டுக்காக பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஆறு நாட்களாக போராடி வருகின்றனர். மெரீனா மட்டுமின்றி தமிழகத்தின், இந்தியாவின், உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் பீட்டா அமைபை சேர்ந்த ராதாராஜன் என்பவர் இலவச செக்ஸ் என்றால்கூட இதைவிட அதிகமான இளைஞர்கள் கூடுவார்கள் என்று கூறியிருந்தார்.

இவருடைய இந்த கருத்துக்கு தமிழ் பெண்கள் உள்பட ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவரை கைது செய்ய வேண்டும் என்றும் நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'ராதாராஜன் அவர்களே உங்கள் வீட்டு பெண்கள் மெரீனா வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பவர்கள் எங்கள் தமிழ் இளளஞர்கள். எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் பீட்டாவுக்கு எதிராக போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிராக போராட வைக்க வேண்டாம்' என்றும் நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X