2025 மே 17, சனிக்கிழமை

பிரணீதாவின் புதுவியாபாரம்

George   / 2015 நவம்பர் 03 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதயன் திரைப்படத்தின் ஊடாக தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை பிரணீதா, கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ்ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஆனால், எந்தத் திரைப்படமும் சரியான வெற்றியைப் பெறாததால் அவரால் தமிழில் முன்னணிக்கு வர முடியவில்லை.

தெலுங்கில் சில வெற்றித் திரைப்படங்களில் இரண்டாவது நாயகியாகவும், கன்னடத்தில் சிலத் திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்து தன்னுடைய மார்க்கெட்டைக் காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார் பிரணீதா. பெங்களூரில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றின் கணிசமான பங்குகளை வாங்கியுள்ளார் பிரணீதா. 

'ஒவ்வொரு நடிகரும், நடிகையும் அவர்களுடைய மார்க்கெட் இறங்கும் போதுதான் வேறு தொழிலில் தங்களது முதலீட்டைச் செய்வார்கள். என்னையும் அந்தப் பட்டியலில் இணைத்து விடாதீர்கள். உணவகத்தில் நான் முதலீடு செய்திருப்பது என் நடிப்புத் தொழிலுடன் சேர்ந்து நடக்கும். என்னுடைய சொந்த ஊர் என்பதால் பெங்களூரை தேர்ந்தெடுத்துள்ளேன்' என்கிறார் பிரணீதா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .