2025 மே 17, சனிக்கிழமை

புலி இரகசியம் கசிவு

George   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைய தளபதி விஜய் நடிப்பில் ஒக்டோபர் 1ஆம் திகதி வெளிவரவுள்ள புலி திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி ரகசிய தகவல் கசிந்துள்ளதால் முழு திரையுலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் விஜய், கேலிச் சித்திர கலைஞராக நடிப்பதாக இந்த செய்தி வெளியாகியுள்ளது.

கதைப்படி சரித்திர காலகட்டத்தை மனதில் கொண்டு சில கதாபாத்திரங்களை ஓவியமாக வரைவாராம் விஜய். ஆனால், அவை ஒருகட்டத்தில் உண்மையில் உயிர்பெற்று விடுமாம். அந்த கேலிச்சித்திரங்கள், விஜய்யை அந்த சரித்திர காலத்துக்குள் இழுத்து சென்று விடுவதுதான் கதையாம்.

மேலும், இந்த புலி திரைப்படத்தில் விஜய் நடித்துள்ள கேலிச் சித்திர கலைஞர்; கதாபாத்திரத்துக்கும் இயக்குநர் சிம்புதேவனுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அதாவது, சினிமாவில் இயக்குநராவதற்கு முன்பு, ஒரு பிரபல வார பத்திரிகையில் கேலிச் சித்திர கலைஞராக பணியாற்றியவர்; சிம்புதேவன் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .