2025 மே 10, சனிக்கிழமை

படுதோல்வியில் தமன்னா

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை தமன்னா பெண் சாமியாராக நடித்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது, அந்த படம் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகி படு தேல்வியை சந்தித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா,  சமீபத்தில் ’ஒடேலா 2’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் பெண் சாமியாராக நடித்திருந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி இந்த படம் திரையரங்குகளில் வெளியானது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், படுதோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. கிளாமர் கேரக்டரில் நடித்து வரும் தமன்னா எதற்காக தேவை இல்லாமல் சாமியார் கேரக்டரில் நடித்தார்?" என்பது தான் ரசிகர்களின் ஆதங்கம் என்று கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X