Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
George / 2017 மார்ச் 15 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
“36 வயதினிலே" திரைப்படத்தைபோன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஜோதிகா.
பல இயக்குநர்கள் சொன்ன கதை பிடிக்காததால் நேரடியாகவே கதை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு நல்ல கதைகளுக்காக காத்திருந்தபோதுதான் “குற்றம் கடிதல்” திரைப்படத்தை இயக்கிய பிரம்மா சொன்ன “மகளிர் மட்டும்” கதையை ஓகே செய்தார் ஜோதிகா.
படப்பிடிப்பு முடிந்து தற்போது திரையிடத் தயாராகி விட்டது. இந்த நேரத்தில் இத்திரைப்படத்தில் ஆவணப்பட இயக்குநராக ஜோதிகா நடித்திருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து, இந்தத் திரைப்படமும் ஆவணப்படம் போலவே படமாக்கப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன.
கிட்டத்தட்ட “குற்றம் கடிதல்“ பாணியில் இந்த திரைப்படம் செய்தி பரவியதை அடுத்து, அதிர்ச்சியடைந்த படக்குழு, இதை மாற்ற வேண்டும் என்பதற்காக “மகளிர் மட்டும்” திரைப்படம் எல்லாவித கமர்சியல் விடயங்களும் கலந்த திரைப்படமாக தயாராகியிருப்பதாக தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago