Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக அர்ச்சனாவின் அன்பு குரூப்பை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
சுசித்ரா, சம்யுக்தா மற்றும் சனம் ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெளியேறியது இதனை உறுதி செய்து போல் உள்ளது. மேலும் அன்பு குரூப்பில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த உண்மை தற்போது தான் ஆரிக்கு புரிந்துள்ளது. அன்பு குரூப்பில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக விளையாடி வருவதாக இன்று காலை வெளியான முதல் புரமோவில் ஆரி புலம்பினார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில் ஆரி மற்றும் பாலாஜி உரையாடுகின்றனர். ‘நான் உனக்கு சொல்லும் அட்வைஸ் என்ன வென்றால் உனக்கு ஷிவானி மேல் அன்பு இருக்கிறது.
ஓகே ஆனால் அந்த அன்பால் கேம் கேட்டுவிடக்கூடாது. ஆனால் கேமை ஒழுங்காக விளையாடாமல் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு செலுத்தி விளையாடுகிறார்கள் என்று அர்ச்சனா குரூப்பை கூறினார்
இதற்கு பாலாஜி கூறிய போது ’உங்களுக்கும் எனக்கும் ஒரு லெவலுக்கு மேல் பேச ஆள் இருக்காது. அதன் பிறகு தனியாக புலம்ப வேண்டியதுதான் என்று கூறினார். இதனை அடுத்து ஆரி, ‘உனக்காவது ஷிவானி இருக்கா, எனக்கு யார் இருக்காங்க? என்று கூறியபோது கவலைப்படாதீர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் ஷிவானியையும் பேக் பண்ணி அனுப்பி விடுவார்கள் என்று என்று கூறி இருவரும் கட்டி அணைத்துக் கொண்டனர்
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தனியாக அமர்ந்து ஷிவானி வழக்கம்போல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அர்ச்சனாவின் அன்பு குரூப்புக்கு எதிராக ஆரி, பாலாஜி இருவரும் ஒன்று சேர்ந்தால் விளையாடினால் பிக்பாஸ் ஆட்டம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15 minute ago
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
30 minute ago