Freelancer / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையாள திரையுலகில் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் அணிவகுக்கும் நிலையில், பிரபல நடிகர் ரியாஸ் கான் மீதும் நடிகையொருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமர்த்தியுள்ளார்.
'AMMA' எனப்படும் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சித்திக், தனக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக இளம் நடிகை ஒருவர் புகார் எழுப்பினார்.

இதனால் கொந்தளித்த மலையாள திரைக்கலைஞர்கள், சித்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சங்க பொறுப்பில் இருக்கக் கூடாது என்றும், போர்க்கொடி உயர்த்தினர். இதன் எதிரொலியாக, சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார் சித்திக்.
இந்நிலையில், இயக்குநர் ரஞ்சித், திரைப்பட விவாதத்திற்காக தன்னை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக, மற்றொரு நடிகையும் புகார் எழுப்பினார். இதனால், சினிமா அகாடமி தலைவர் பதவியைத் துறப்பதாக அறிவித்தார் இயக்குநர் ரஞ்சித்.
இதன் தொடர்ச்சியாக, சித்திக் மீது பாலியல் புகார் எழுப்பிய அதே இளம் நடிகை, நடிகர் ரியாஸ் கான் மீதும், பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தன்னுடன் தொலைபேசியில் பேசிய ரியாஸ் கான், பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசியதாக புகார் எழுப்பியுள்ளார்.S
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago